முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'ஒரு நாள் நக்மா என்னுடன் இருக்க வேண்டும்' பிரபல ரவுடியின் டைரியில் சிக்கிய விஷயம்..!!

One day Nakma should be with me' is the thing caught in the famous rowdy's diary
01:33 PM Aug 02, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை நக்மா. ரஜினிகாந்த், சரத்குமார் மாதிரியான பிரபல நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்து வந்த நக்மா தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே கவர்ச்சியான ஒரு நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.

Advertisement

அவருக்கு அப்போது வரவேற்பு என்பது மிக அதிகமாக இருந்தது. இவர் தமிழில் முன்னணி நடிகையான ஜோதிகாவின் சகோதரியாவார். இவர் நடித்த பாட்ஷா, காதலன் மாதிரியான பல படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன. தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தவர் நக்மா. இவரின் வரவேற்பை பார்த்து ஹிந்தி தெலுங்கு மொழிகளிலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. அங்கும் சென்று ஒரு கலக்கு கலக்கி விட்டுதான் வந்தார். 48 வயதான நக்மா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு ஒரு வீடியோவில் நக்மா குறித்து பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "நக்மாவின் தாய் முதலில் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் நக்மா. சில காலத்திலேயே அவர்கள் பிரிந்துவிட்டார்கள். பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் ஜோதிகா. ஆனாலும் நக்மாவும், ஜோதிகாவும் ஒரே குடும்பம் போல்தான் பழகுவார்கள். நக்மாவின் இரண்டாவது தந்தைதான் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

மேலும், 90களில் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. அந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், நான் இந்த விஷயத்தை செய்ய வேண்டுமென்றால் ஒரு நாள் நக்மா என்னுடன் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. அதேபோல் சர்வதேச அளவிலான தாதாவுடனும் நக்மா தொடர்பில் இருந்ததாக சொல்வார்கள். அதிலும் உண்மை இருக்கிறதா என்று தெரியவில்லை" என்றார்.

Read more ; மக்களே..!! இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..!! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா..?

Tags :
actress Nakmacinema
Advertisement
Next Article