For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’ஒரே நாடு ஒரே தேர்தல்’..!! சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் முக.ஸ்டாலின்..!!

08:20 AM Feb 14, 2024 IST | 1newsnationuser6
’ஒரே நாடு ஒரே தேர்தல்’     சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் முக ஸ்டாலின்
Advertisement

மத்திய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வரவுள்ளார்.

Advertisement

இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்த சம்பவம் அரசியல் அரங்கில் சலசலப்புகளை உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே தேர்தல், திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழியவுள்ளார். 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்து மோடி பிரதமரானது முதல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை மோடி வலியுறுத்தி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவும் அமைக்கப்படுள்ளது.

ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவையில் மற்றொரு தீர்மானமாக 2026ஆம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிகிறது.

Tags :
Advertisement