முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”ஒரே நாடு ஒரே தேர்தல்”..!! சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் முக.ஸ்டாலின்..!!

11:04 AM Feb 14, 2024 IST | 1newsnationuser6
Advertisement

மத்திய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

Advertisement

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல், திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிந்தார். 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்து மோடி பிரதமரானது முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை மோடி வலியுறுத்தி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவும் அமைக்கப்படுள்ளது.

ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்ப்பு தெரிவித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை கலைக்கும் நிலை ஏற்படும். அரசியலமைப்பு சட்டத்தை காக்கும் வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

Tags :
ஒரே நாடு ஒரே தேர்தல்சட்டப்பேரவைசட்டமன்றம்தீர்மானம்
Advertisement
Next Article