For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாழ்நாளில் ஒருமுறைதான்!… பூமியை கடந்து செல்லும் அரிய நட்சத்திரம்!… வெறும் கண்ணாலே பார்க்க முடியும்!

05:56 AM Apr 03, 2024 IST | Kokila
வாழ்நாளில் ஒருமுறைதான் … பூமியை கடந்து செல்லும் அரிய நட்சத்திரம் … வெறும் கண்ணாலே பார்க்க முடியும்
Advertisement

Pons-Brooks: நவீன அறிவியல்கள் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் மனிதனால் தொடமுடியாத இயற்கையின் பாகங்கள் எத்தனையோ உள்ளன. அவை ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் அள்ளித் தருபவை என்பதுதான் சுவாரஸ்யம். அதில் ஒன்றுதான் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியை கடந்து செல்லும் அரியவகை வால் நட்சத்திரம். அதாவது, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய அரிய நிகழ்வாக, Pons-Brooks என்ற நட்சத்திரம் பூமியை கடந்து செல்கிறது.

Advertisement

மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாத துவக்கம் வரை இந்த வால் நட்சத்திரத்தை நன்கு பார்க்க முடியும். இதை மிஸ் செய்தால், 2095 ஆம் ஆண்டில் தான் பார்க்க முடியுமாம். கற்பனைக்கும் எட்டாத பேரதிசயங்கள் வானில் நடைபெற்று வருகின்றன. பிரபஞ்சத்தில் மனிதனால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு வானியல் மாற்றங்கள் தினம்தோறும் நடந்து கொண்டிருந்தன. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவையும் இந்த பட்டியலில் தான் அடங்குகிறது.

இந்த நிலையில்தான், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய அரிய நிகழ்வு வானில் நடைபெற்றுள்ளது. Pons-Brooks என்ற நட்சத்திரம் பூமியை கடந்து செல்கிறது. சூரிய குடும்பத்திற்குள் உள்பகுதியில் இந்த நட்சத்திரம் கடந்து செல்வது 70 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

வெறும் கண்ணாலே பார்க்க முடியும்: மதர் ஆஃப் டிராகன்ஸ் என்று அழைக்கப்படும் நட்சத்திரம் இனி 2095 ஆம் ஆண்டில் தான் பூமியில் இருந்து தென்படுமாம். தற்போது பூமிக்கு நெருக்கமாக கடந்து செல்லும் இந்த நட்சத்திரம் சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதாம். இந்த நட்சத்திரம் தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியாதவது: " இந்த நட்சத்திரத்தை வெறும் கண்ணாலே பார்க்க முடியும்.

கொம்பு வடிவத்தில்: எனினும், சிறிய ரக ஸ்பைனாகுலர்கள் இருந்தால் ஈசியாக பார்க்கலாம். மேற்கு அடிவானத்தில் இந்த நட்சத்திரம் தென்படும். கொம்பு வடிவத்தில் இந்த வால் நட்சத்திரம் இருக்கும். இதனால் இந்த வால் நட்சத்திரத்திற்கு டெவில் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வால்நட்சத்திரம் பனிகளால் நிறைந்தது.

தூசுகள், கடினமான பாறைகளும் உள்ள வால் நட்சத்திரம் சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும் போது, சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பத்தால் அதில் உள்ள பனிகள் உருகி தூசுகளை வெளிப்படுத்தும். அப்போது வால்நட்சத்திரம் மிளிரும். சூரிய காற்றின் காரணமாக சூரியனிடம் இருந்து விலகி செல்லும் போது, நட்சத்திரத்தின் பின்னால் வால் போன்ற தோற்றம் உருவாகும்.

எப்போது பார்க்க முடியும்?: மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாத துவக்கம் வரை இந்த வால் நட்சத்திரத்தை நன்கு பார்க்க முடியும். இந்த கால கட்டத்தில் தெளிவான வானத்தில் அந்தி சாயும் நேரத்தில் மேற்கு அடிவானத்தில் கண்ணுக்கு புலப்படும்" என்றனர். வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகளான ஆஸ்திரேலியா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் இரவு நேரத்தில் வெறும் கண்களால் எளிதாக தெரியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Readmore: இனி தப்பிக்க முடியாது!… தேர்தல் குறித்த தவறான தகவலை சரிபார்க்க புதிய வலைதளம்!

Tags :
Advertisement