For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TASMAC | இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை..!! - ஆட்சியர் உத்தரவு

On the occasion of Marutubandyar Memorial Day and Devar Jayanti, the district administration has ordered a 3-day holiday for liquor shops in Madurai and Sivagangai districts to maintain law and order.
06:34 PM Oct 23, 2024 IST | Mari Thangam
tasmac   இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை       ஆட்சியர் உத்தரவு
Advertisement

மருதுபாண்டியர் நினைவு நாள், தேவர் ஜெயந்தி ஆகிய விழாவினையொட்டி, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாள் அரசு விழாவாக வருகிற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதேபோல, வருகிற 27-ஆம் தேதி காளையாா்கோவில் மருதுபாண்டியா்களின் நினைவு தினம் அனுசரிப்பு, வருகிற 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதனால், வரும் அக்.27, அக். 29 மற்றும் அக். 30 ஆகிய 3 நாள்களுக்கு அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”27.10.2014 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர், நினைவுதினத்தை முன்னிட்டும், 29.10.2024, 30.10.2024 ஆகிய நாட்களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினவிழாவை முன்னிட்டும், மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு மூன்று நாட்களுக்கு மட்டும் மதுரை மாவட்டத்தில் இயங்கிவரும் மதுபான விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முதற்கட்ட செய்தி குறிப்பில், "சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் 223-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பத்துார் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் 23.10.2024 அன்று மாலை 06.00 மணி முதல் 24.10.2024 வரை முழுவதுமாக மூடப்படும்”  என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Read more ; தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 30-ம் தேதி வரை நீட்டிப்பு…!

Tags :
Advertisement