For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அசத்தல்...! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5,000 பரிசுத்தொகை...! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா...?

07:00 AM Nov 02, 2023 IST | 1newsnationuser2
அசத்தல்     பள்ளி  கல்லூரி மாணவர்களுக்கு ரூ 5 000 பரிசுத்தொகை     எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா
Advertisement

ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிப்பிற்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டி முறையே 08.11.2023 ஆம் நாளன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முற்பகல் 09.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

Advertisement

ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு- சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம் ஆகிய தலைப்பு அடங்கும். கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு - சுதந்திரப் போராட்டத்தில் நேரு, பஞ்சசீல கொள்கை, நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/- மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாகத் தொகை ரூ.2000/- வீதம் வழங்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement