ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்..!!
சுதந்திர தினம், குடியரசு தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. கடந்தாண்டு சுதந்திர தினத்தன்றும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன. ஆனால், மழை காரணமாக ஆளுநர் மாளிகையே தேநீர் விருந்தை தள்ளிவைத்தது.
அதேபோல் கடந்த குடியரசு தின விருந்தையும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்தன. இந்நிலையில், இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று மாலை தேநீர் விருந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்தன.
இந்நிலையில், ஆளுநர் பதவிக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசுத் தரப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலிம் மற்றும் அமைச்சர்கள் தேநீர் விருந்தில் பங்கேற்கவுள்ளதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருந்தார். சுதந்திர நாளில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் விருந்தளிப்பார். அதன்படி, இன்று(ஆக. 15) ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்று வருகிறது.
Read more ; தாய்லாந்து அரசியல் குழப்பம்.. முன்னாள் பிரதமரின் மகள் பிரதமர் பதவிக்கு பரிந்துரை..!!