கடினமான வேலை.. சாப்பாடு கூட தரல.. வெளிநாட்டு வேலைனு சொல்லி ராணுவத்தில் சேர்த்துட்டாங்க..!! - ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் குமுறல்
பிரதமர் மோடி தலையீட்டின் பேரில் ரஷ்யா ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் நாடு திரும்பினர். அங்கு அவர்கள் பட்ட வேதனையையும், துயரத்தையும் கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது : ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அந்நாட்டு அரசிடம் வெளியுறவுத்துறை அமைச்சகம்வேண்டுகோள் விடுத்தது. தற்போது ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 4 பேர் தற்போது நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் தெலங்கானாவைச் சேர்ந்த முகமதுசுபியன், கர்நாடகாவைச் சேர்ந்த சையத் இலியான் உசைனி ஆகியோர் கூறியதாவது:
வெளிநாட்டு வேலை எனக் கூறி இந்தியாவில் இருந்து 60-க்கும்மேற்பட்ட இளைஞர்கள் மோசடியாக கடந்தாண்டு ரஷ்யா அனுப்பப்பட்டோம். நாங்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டோம். காலை 6 மணியிலிருந்து தொடர்ந்து 15 மணி நேரம் எங்களுக்கு ஓய்வின்றி வேலை கொடுக்கப்பட்டது. பதுங்கு குழிகள் தோண்டுவது, துப்பாக்கி சுடுவது, கையெறிகுண்டுகளை வீசுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
குறைவான உணவு அளிக்கப்பட்டு கடினமான வேலைகள் வழங்கப்பட்டன. நாங்கள் சோர்வடைந்தால் துப்பாக்கியால் சுட்டு மிரட்டுவர். செல்போன்களை பறித்து வைத்துக்கொள்வர். அதிக மனஅழுத்தமான சூழ்நிலையில் நாங்கள் உக்ரைன் போரில் பணியாற்றினோம். எங்களுடன் வந்த குஜராத்தைச் சேர்ந்தஹமில் ட்ரோன் குண்டு தாக்குதலில்உடல் சிதறி உயிரிழந்தது, எங்களைஉலுக்கியது. இதனால் நாங்கள்எங்கள் குடும்பத்தினரை தொடர்புகொண்டு மீட்பதற்கு வேண்டுகோள் விடுத்தோம். நாங்கள் நாடு திரும்பவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுத்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Read more ; திமுக பாணியில் நடிகர் விஜய்..? கொந்தளிக்கும் ரசிகர்கள்..!! ஒரே ஒரு பதிவால் பெரும் அதிருப்தி..!!