முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முக்கிய அறிவிப்பு: பள்ளிகள் திறந்த முதல் நாளே... ஆதார் பதிவு தொடக்கம்...!

05:55 AM May 30, 2024 IST | Vignesh
Advertisement

அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் ஆதார் எண் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், அதற்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு தொடங்கப்படும்.

பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்க நிரந்தர ஆதார் மையத்திற்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு, மாணக்கார்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் எண் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலை மேற்கொண்டு பயன்பெற "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" சிறப்பு முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முகாமை பயன்படுத்திக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் பெற்றுத்தர அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Aadharaadhar updateschool studentstn government
Advertisement
Next Article