நாடு முழுவதும்...! வரும் 23-ம் தேதி காலை 6 மணி பாஸ்போர்ட் இணையத்தள சேவை இயங்காது...!
தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக பணிகள் பாஸ்போர்ட் சேவை வலைத்தளம் (www.passportindia.gov.in) நேற்று இரவு 8 மணியிலிருந்து 23-ம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை இயங்காது. எனவே விண்ணப்பதாரர்கள் இந்த பராமரிப்பு காலத்திற்குப் பின்னர் தளத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் கூறியுள்ளது.
இது குறித்து பாஸ்போர்ட் அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக நேற்று இரவு 8 மணி முதல் செப்டம்பர் 23.09.2024 (திங்கள்கிழமை) காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். குடிமக்கள் மட்டுமல்லாது, வெளியுறவு விவகார அதிகாரிகள், குடிவரவு பணியக அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பாஸ்போர்ட் சேவா தளத்தை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், அனைத்துவிதமான சேவைகளுக்கும் (பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் மற்ற சந்தேகங்களுக்கும்) தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலக தொலைபேசி 0452-2521205 மற்றும் 0452-2521204 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்