Olympics | 162 நாடுகளால் கூட சாதிக்க முடியவில்லை..!! தனிநபராக சாதித்து காட்டிய வீரர்..!!
ஒலிம்பிக்கில் அதிகமான பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு நாடுகளுக்குமே இருக்கும். இதற்காக பல பல கோடி ரூபாயை தங்களது வீரர்களுக்கு சம்பந்தப்பட்ட நாடு செலவு செய்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் தொடரானது ஒவ்வொரு நாடுகளின் கௌரவமாகவும், சில சமயங்களில் பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக்கில் தனிநபர்களும் உச்சகட்ட சாதனையை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், 162 நாடுகளால் செய்ய முடியாததை அமெரிக்கா நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் சாதித்துள்ளார். அதாவது, ஒலிம்பிக்கில் மட்டும் இவர் 28 பதக்கங்களை வென்றுள்ளார். அதில், 23 பதக்கங்கள் தங்கமாகும். அவற்றுடன் 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளார்.
கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் தனது 15-வது வயதில் பெல்ப்ஸ் பங்கேற்றார். இருப்பினும் அந்த போட்டியில் அவர் பதக்கம் வெல்லவில்லை. பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும், நீச்சல் போட்டியின் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை அள்ளிக் குவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் இவர் வாங்கிய பதக்கங்கள் சுமார் 162 நாடுகளால் பெற முடியாதவை. இவரது சொத்து மதிப்பு மட்டுமே இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 850 கோடி வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்றைக்கு நீச்சல் மட்டுமின்றி, விளையாட்டு துறையில் சாதிக்க விரும்பும் ஏராளமான வீரர்களுக்கு மைக்கேல் பெல்ப்ஸ் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.
Read More : ஆடி செவ்வாய்..!! இன்று விரதமிருந்து இப்படி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..?