ஒலிம்பிக் ஹாக்கி..!! அரையிறுதியில் சாதிக்குமா இந்தியா..? ஜெர்மனியுடன் இன்று பலப்பரீட்சை..!!
ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இன்று இந்தியா-ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஒலிம்பிக் ஹாக்கியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதலில் போட்டிகள் லீக் முறையில் நடந்தன. உலகத்தரவரிசையில் 'நம்பர்-7' இடத்தில் உள்ள இந்திய அணி, லீக் சுற்றில் 'பி' பிரிவில் இடம் பெற்றது. 3 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் காலிறுதிக்கு சென்றது. இதில், உலகின் 'நம்பர்-2' அணியான இங்கிலாந்தை 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது.
அந்த வகையில், இன்று நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, 'நம்பர்-5' இடத்தில் உள்ள ஜெர்மனியை எதிர்கொள்கிறது. ஒலிம்பிக் அரங்கில் 1928 - 1980 வரை இந்தியா 8 தங்கம் வென்றது. இந்தியாவை பொறுத்தவரை லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை சாய்த்தது பெரும் ஊக்கம் தந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில், கடைசி 43 நிமிடம் (மொத்தம் 60 நிமிடம்) 10 வீரர்களுடன் துணிச்சலாக போராடி இந்தியா வென்றது. இந்த வெற்றிகள் இன்றைய அரையிறுதியில் இந்திய வீரர்கள் தன்னம்பிக்கையுடன் போராட மன உறுதியை கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Read More : ஆடி செவ்வாய்..!! இன்று விரதமிருந்து இப்படி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..?