ஒலிம்பிக் திருவிழா!. சீனாவை தோற்கடித்த இந்தியா!. அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை!
Paris Olympic: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் சீன வீரரை வீழ்த்தி இந்தியாவின் லக் ஷயா சென் அரையிறுதிக்குள் நுழைந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதக்கங்களை வெல்லும் முனைப்பில் அனைத்து நாட்டு வீரர்களும் தீவிரமாக களமிறங்கி வருகின்றனர். அந்தவகையில் இந்தியா சற்று பின்னடைவை சந்தித்தாலும், படிப்படியாக முன்னேறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டன் போட்டியின் காலிறுதி போட்டியில் சீனாவின் தைபே வீரர் சோவ் டியன் சென்- இந்தியாவின் லக் ஷயா சென் ஆகியோர் மோதினர்.
19-21 என்ற கணக்கில் முதல் செட்டை போராடி தோற்று பின்தங்கிய லக்ஷயா, பின்னர் அதிரடியாக விளையாடி தைபே வீரரை திணறடித்தார். சென் 21-15, 21-12 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: 2030-ம் ஆண்டுக்குள் மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்க திட்டம்…!