For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முதியவர் பலி எதிரொலி!… சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் ரூ.5000 அபராதம்!… ஆணையர் எச்சரிக்கை!

07:53 AM Jan 11, 2024 IST | 1newsnationuser3
முதியவர் பலி எதிரொலி … சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் ரூ 5000 அபராதம் … ஆணையர் எச்சரிக்கை
Advertisement

சென்னை நங்கநல்லூரியில் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது மாடுமுட்டியதில் முதியவர் உயிரிழந்ததையடுத்து, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

சென்னை நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலனி பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் சந்திரசேகர். இவர், சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, அங்கு சண்டையிட்டுக்கொண்டிருந்த எருமை மாடுகள் திடீரென சந்திரசேகரை முட்டி தள்ளின. இதில் படுகாயங்களுடன் மயங்கிவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, நங்கநல்லூர், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துவருவதற்கு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மாநகராட்சியில் இதுபோன்று சாலையில் தொடர்ந்து மாடுகளை திரியவிடும் உரிமையாளர்களிடம் இருந்து மாடுகளை பறிமுதல் செய்யப்படுவதாகவும், மேலும், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து புதுப்பேட்டை, பெரம்பூரில் உள்ள மாட்டுத்தொழுவங்களில் அடைக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். இருப்பினும், விதிகளை மீறி மீண்டும் மாடுகளை அவிழ்த்துவிடும் உரிமையாளர்களுக்கு அபராத தொகை ரூ.2000த்திலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கைவிடுத்துள்ளார். தொடர்ந்து மாடுகளை விடுபவர்களுக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்த ஆணையர், இதுபோன்று மாடுகளை விடுவித்தால், மாட்டின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.

Tags :
Advertisement