13 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பலாத்காரம் செய்த முதியவர்..!! மருத்துவ பரிசோதனையில் வெளிச்சத்திற்கு வந்த கர்ப்பம்..!!
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து 2 மாத கர்ப்பமாக்கிய வழக்கில் 62 வயதான முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தட்டு வந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் தனியார் வேன் ஓட்டுனர் நாகராஜ் (62). இவர், அதே கிராமத்தைச் சார்ந்த 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி, அவருடைய வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சாக்லேட் கொடுத்து ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
பின்னர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் சிறுமி உடல் உபாதையால் அவதிப்பட்டுள்ளார். இதனால், சிறுமி அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, சிறுமியிடம் விசாரித்ததில், வீட்டின் அருகாமையில் உள்ள நாகராஜ் என்ற முதியவர் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 62 வயதான ஓட்டுநர் நாகராஜை கைது செய்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.