முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

“தாத்தா தான கூப்பிடுறேன், என்கூட வா”; 6 வயது சிறுமியை அழைத்து சென்ற 64 வயது முதியவர் செய்த கொடூரம்.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…

old-man-raped-6-years-old-girl
04:35 PM Nov 13, 2024 IST | Saranya
Advertisement

சமீப காலமாக, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற குழந்தைகளை கற்பழிக்கும் அநேகர் வயதான முதியவர்களாக தான் உள்ளனர். அந்த வகையில், மதுரையில் தற்போது நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மதுரை, முத்துப்பட்டி கண்மாய் கரையை சேர்ந்தவர் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . 6 வயதான இந்த சிறுமி, அங்குள்ள பள்ளி ஒன்றில், முதலாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10.9.2022-ல் சிறுமியின் பெற்றோர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 64 வயது முருகேசன் சிறுமியின் வீட்டிற்க்கு சென்றுள்ளார். மேலும், “தாத்தா தான கூப்பிடுறேன் என்கூட வீட்டுக்கு வா” என்று கூறி, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். என்ன நடக்க போகிறது என்பதை உணராத பிஞ்சு குழந்தை, தாத்தா தானே கூப்பிடுகிறார் என்ற தைரியத்தில் முருகேசனின் வீட்டிற்க்கு சென்றுள்ளார். அப்போது முருகேசன், தனது வீட்டில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

தனக்கு என்ன நடக்கிறது என்பதை கூட அறியாத சிறுமி, தனது பெற்றோர் வீட்டிற்க்கு வந்த உடன் தனக்கு நடந்ததை குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளார். தங்களின் மகளுக்கு முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்ததை புரிந்து கொண்ட பெற்றோர், இது குறித்து திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கை மதுரை போக்சோ நீதிமன்ற நீதிபதி முத்து குமாரவேல் விசாரித்தார். இந்நிலையில், விசாரணை முடிந்த நிலையில், முருகேசனுக்கு சாகும் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 11 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Read more: “நடிகர் அஜித்துக்கு ஆண்மை இருக்கானு சந்தேகமா இருக்கு”; தன்னை அசிங்கப்படுத்திய பத்திரிகையாளருக்கு அஜித் செய்த காரியம்..

Tags :
arrestold manrape
Advertisement
Next Article