முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”ஆ ஊன்னா என்ன”..? ”சாதிக்க முடியலைன்னா இப்படித்தான்”..!! ”இந்த வேலையெல்லாம் எங்ககிட்ட நடக்காது”..!! டென்ஷனான எடப்பாடி..!!

If you can't achieve anything, you can only talk like this.. What else can you talk about? What's the point of talking like this?
05:02 PM Dec 09, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று டங்ஸ்டன் சுரங்க உரிமைக்கு எதிரான மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் துரைமுருகன் இடையே காரசார விவாதம் நடந்தது.

Advertisement

மதுரை மாவட்டத்தில் டங்க்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமை ஏல நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதனை அமைச்சர் துரைமுருகன் வழிமொழிந்தார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”இந்த தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்ற முழு விவரங்களை கூட சொல்லாமல் நாங்கள் ஆமாம் போட வேண்டுமா? இந்த டங்க்ஸ்டன் விவகாரத்தினை ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால் இந்த தீர்மானம் போட வேண்டிய தேவையே இருந்திருக்காது” என்றார்.

எடப்பாடி பழனிசாமி: சுரங்கத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோரியபோதே அரசு தடுத்து நிறுத்தியிருக்கலாம். டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க கூடாது என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், அதற்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் 'இந்த திட்டம் கொண்டு வந்து 10 மாதங்கள் ஆகிறது. ஏன் கால தாமதம் என்று கேட்டிருந்தனர்'. மத்திய அரசு சொல்லியிருந்த அந்த காரணத்தை தான் நாங்கள் ஏன்? என்று கேட்கிறோம்.

சுரங்கம் வரவேண்டாம் என்றால் தீர்மானத்தை ஆதரியுங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கூற, சட்டம் நிறைவேறிய பிறகு இப்போது தீர்மானம் கொண்டு வந்த என்ன பிரயோஜனம். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும். அப்போது அமைதியாக இருந்துவிட்டீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமடைந்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய துரைமுருகன், ”எதிர்க்கட்சி தலைவர் ஒழுக்கமாக பேசுகிறார். நானும் பேசிவிடுவேன். ஏற்கனவே இந்த திட்டத்தை எல்லாம், தோண்டி எடுத்து மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டேன். கால தாமதம் ஆனதால் தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறோம்” என்றார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஒன்னும் சாதிக்க முடியவில்லை என்றால் இப்படித்தான் பேச முடியும்.. வேற என்ன பேசமுடியும். இப்படி பேசினால் என்ன அர்த்தம்.. "ஆ.. ஊன்னு கத்த மட்டும் தான் தெரியும். சரக்கு இருந்தால் தானே பேச முடியும்.". மூத்த உறுப்பினர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கணும். மக்களின் பிரச்சனையை உயிரை கொடுத்தாவது காப்பாத்துவோம். இந்த வேலை எல்லாம் இங்க நடக்காது. எங்கள் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் பதில் இல்லை” என்றார்.

இதையடுத்து பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், “நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்க்ஸ்டன் சுரங்கம் அமையாது. அப்படி அமைந்தால் நான் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று கூறினார். தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க உரிமைக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Read More : திடீர் நிலச்சரிவு..!! 172 கிராமங்களை அழித்த வெள்ளம்..!! கரைபுரண்டு ஓடும் ஆறுகள்..!! 10 பேர் உயிரிழப்பு..!!

Tags :
எடப்பாடி பழனிசாமிசட்டமன்றம்துரைமுருகன்முதலமைச்சர் முக.ஸ்டாலின்
Advertisement
Next Article