முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அட கொடுமையே..!! இஞ்சி, பூண்டு பேஸ்ட் இப்படித்தான் தயாரிக்கப்படுகிறதா..? இனி வாங்கவே மாட்டீங்க..!!

A video related to trampling ginger and garlic without even minimum hygiene has been released and has received many condemnations.
02:28 PM Aug 16, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் சமையலுக்கு இஞ்சி, பூண்டு விழுதை வீட்டில் பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் வீட்டிலேயே அரைக்காமல், அதை கடையில் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், அது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் கடையில் வாங்கி பயன்படுத்தும் இஞ்சி, பூண்டு விழுதுகள் நமது உடலுக்கு ஆரோக்கியமற்றது என தெரியவந்துள்ளது.

Advertisement

வேலை சுலபமென்று நினைத்து எளிதில் கிடைக்கக் கூடிய இஞ்சி, பூண்டு விழுதுகளை அருகில் உள்ள கடைகளிலோ அல்லது சூப்பர் மார்க்கெட்டிலோ நாம் வாங்கி வந்து சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் தான், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இஞ்சி, பூண்டு எப்படி தயார் செய்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், குறைந்தபட்ச சுகாதாரம் கூட இல்லாமல் இஞ்சி, பூண்டுகளை கால்களில் மிதிப்பது தொடர்பான வீடியோ வெளியாகி பலரது கண்டனங்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோ வெளிவந்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த நிறுவனத்தை கண்டித்தும், மேலும் தரமற்ற உணவு முறைகளை கடைகளிலோ அல்லது சூப்பர் மார்க்கெட்டிலோ பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்று தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

Read More : மாநாட்டிற்காக நில உரிமையாளர்களை மிரட்டும் விஜய் கட்சியினர்..!! இதுதான் ஜனநாயகமா..? விளாசிய சீமான்..!!

Tags :
Ginger Garlic Pasteஇஞ்சிபூண்டு
Advertisement
Next Article