”ஐயோ சார் விட்ருங்க”..!! பார்ட்டியில் போதைப்பொருள்..!! தனியாக இருந்த நர்ஸ்..!! தரதரவென இழுத்துச் சென்று பலாத்காரம் செய்த டீன்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 22 வயது நர்ஸை தனியார் மருத்துவமனையின் இயக்குநர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயது பெண் கடந்த 2 மாதங்களாக கல்யாண்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் மருத்துவமனையில் இயக்குநர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர், வேலை இருப்பதாக சொல்லி இரவு மருத்துவமனையில் தங்குமாறு இயக்குநர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, நள்ளிரவில் அவர் அந்த நர்ஸை தனது அறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கதவை பூட்டியுள்ளார். மேலும், அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட விருந்தில் போதைப்பொருள் கலந்து கொடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட செவிலியர் குற்றம்சாட்டியுள்ளார். தனியார் மருத்துவமனை இயக்குநர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நீதிபதி முன்பு வாக்குமூலம் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்றதாக கல்யாண்பூரின் காவல் உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே கூறினார்.