முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடடே..!! உடல் எடையை குறைக்க சூப்பர் ஜூஸ் இதுதான்..!! வெறும் 7 நாட்களில் தொப்பையை கரைக்கலாம்..!!

In this post, you will see how to make pumpkin and carrot juice that helps with weight loss.
05:10 AM Dec 11, 2024 IST | Chella
Advertisement

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஜூஸ் குடிக்கலாம் என்பது புதிய விஷயம் அல்ல. ஏனென்றால், உடல் எடையை குறைக்க நாம் டயட்டில் இருக்கும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அந்த வகையில், பழ ஜூஸ்களில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. அந்தவகையில், உடல் எடை குறைப்புக்கு உதவும் பூசணிக்காய், கேரட் ஜூஸ் எப்படி செய்வது என இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

தேவையான பொருட்கள் :

பூசணிக்காய் (சிறியது) - 1

கேரட் - 3

ஆப்பிள் பழம் - 1

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

இலவங்கப்பட்டை பொடி - 1/2 ஸ்பூன்

ஐஸ் கட்டி - தேவையான அளவு

நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஜூஸ் செய்ய எடுத்துக் கொண்ட சிறிய அளவிலான பூசணிக்காயை தோல் நீக்கி சுத்தம் செய்யவும். பின்னர், அதில் இருக்கும் விதைகளை நீக்கி, காயினை மட்டும் சிறிய துண்டுகளாக வெட்டி தனியே எடுத்து வைக்கவும்.

* அதேபோல், கேரட்டினை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தொடர்ந்து இஞ்சியையும் தோல் நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும்.

* தற்போது ஒரு முழு ஆப்பிள் பழத்தை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும். பின்னர் இந்த ஆப்பிளையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* தற்போது ஒரு மிக்ஸி ஜாரில் பூசணிக்காய், ஆப்பிள் மற்றும் கேரட்டை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து, இதில் ஐஸ் கட்டிகள் மற்றும் சர்க்கை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

* பின்னர் இதனுடன் இஞ்சி துண்டுகளை இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இலவங்கப்பட்டை பொடியையும் சேர்த்து ஒரு முறை அரைத்துக்கொள்ளவும். தேவையிருப்பின் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

* நன்கு அரைக்கப்பட்ட இந்த ஜூஸினை ஒரு வடிக்கட்டி பயன்படுத்தி, திப்பைகளை நீக்கி ஒரு குடுவையில் சேமித்து வைக்க சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ் ரெடி.

* ஒரு கிளாஸில் இந்த சாறை ஊற்றி, கேரட் துண்டுகளை வட்ட வடிவில் வெட்டி அழகுக்கு கிளாஸின் விளிம்பில் வைத்து அழகாக பரிமாறலாம். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகளை இதன் மீது சேர்த்துக்கொள்ளலாம்.

Read More : பேப்பர் கப்பில் டீ, காஃபி குடிப்பது நல்லதுன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா..? ரொம்பவே ஆபத்து..!! கேன்சர் கூட வருமாம்..!!

Tags :
உடல் எடை குறைப்புஊட்டச்சத்துகேரட்பழ ஜூஸ்பூசணிக்காய்
Advertisement
Next Article