”ஐய்யோ விடாம துரத்துறாங்களே”..!! போலீஸ் முன் இன்று ஆஜராகிறார் அல்லு அர்ஜுன்..!! அந்த வீடியோ வெளியானதால் அதிரடி ஆக்ஷன்..!!
செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி, மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, படத்தின் 2-வது பாகம் டிசம்பர் 5இல் வெளியானது. மேலும், படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா சந்தியா தியேட்டருக்கு வந்தனர்.
அப்போது குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் ஸ்ரீதேஜா இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுப் பேச்சின்றி சுயநினைவை இழந்தனர். பின்னர், அவர்களை மீட்டு முதலுதவி அளித்த போலீசார், ஆர்டிசி கிராஸ்ரோட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், தாய் ரேவதி இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். இதனால், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல், அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்னர், நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆனால், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று (டிசம்பர் 24) காலை 11 மணிக்கு சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக போலீசார் அறிவுறுத்தலையும் மீறி அல்லு அர்ஜூன் திரையரங்குக்கு சென்றது, ரசிகர் இறந்த பின்னரும் திரையரங்கிலேயே 2 மணிநேரம் இருந்தது போன்ற வீடியோக்களை போலீசார் வெளியிட்டிருந்தனர். அல்லு அர்ஜூன், சிறப்பு வெளியீட்டு நிகழ்ச்சி நடந்த திரையரங்க உரிமையாளர் உள்ளிட்டோரும் இன்றைய விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.
Read More : மாணவர்கள் குஷி..!! இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!