’அடக்கடவுளே நீ இங்கதான் இருக்கியா’..? சீரியல் கில்லரை 42 ஆண்டுகளாக தேடி வந்த போலீஸ்..!! கடைசியில் செம ட்விஸ்ட்..!!
அமெரிக்காவின் ஓஹியோவில் இருந்து மார்ச் 23, 1980 அன்று பாரெட் என்ற 24 வயது பெண், கல்லூரி நண்பர்களுடன் புளோரிடாவின் டேடோனா கடற்கரைக்குச் சென்றுள்ளார். அதே நாள், டேடோனா பீச் ட்ரெஷர் ஐலேண்ட் ஹோட்டலில் இருந்து பாரெட் அடையாளம் தெரியாத ஒருவரால் கடத்தப்பட்டார். அடுத்த நாள், புளோரிடாவின் ஜாக்சன் வில்லியில், பாரெட்டின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த பிரேத பரிசோதனையில், பாரெட் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை, பல ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்த 2017ஆம் ஆண்டில், பாரெட் தன் மரணத்தை எதிர்த்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான எந்த முயற்சிகளும் செய்யவில்லை என்பது விசாரணையில் உறுதியானது. இதற்கிடையில், பாரெட்டின் நண்பர்கள் அளித்த அடையாளத்தின்படி, ஓர் உருவம் வரையப்பட்டது. அதன் மூலம், இந்த வழக்கும் விசாரிக்கப்பட்டு வந்தது.
மேலும், கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் மதிப்பாய்வு செய்த பின்னர், காவல்துறை 2020ஆம் ஆண்டு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு நடத்திய விசாரணையின் இறுதியில், டீன்ஸ் என்பவரின் கொலையில் கைது செய்யப்பட்ட மேன்ஸ்ஃபீல்ட் என்பவருடன் அந்தப் புகைப்படம் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரிகள், “மேன்ஸ்ஃபீல்ட் தனது வாழ்நாளின் பெரும்பகுதியில், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டவர்.
1982ஆம் ஆண்டு கலிபோர்னியா மற்றும் புளோரிடாவில் 5 பெண்களைக் கடத்திக் கொலை செய்த வழக்கில், அவருக்குப் பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது. புளோரிடாவில், தனது வீட்டின் பின்புறத்தில் அவர் புதைத்த 4 உடல்களைக் கண்டெடுத்தோம். தற்போது, 44 ஆண்டுகளுக்கு முன்பு பாரெட்டைக் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். சீரியல் கில்லரான இவர், தற்போது கலிபோர்னியா சிறைச்சாலையில் இருக்கிறார். இருந்தபோதிலும், மேன்ஸ்ஃபீல்டுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஏனெனில் அவர் தற்போது கலிபோர்னியா சிறைச்சாலையில், கொலை செய்ததற்காக ஒரே நேரத்தில் 4 ஆயுள் தண்டனைகளை அனுபவித்து வருகிறார். மேலும், மற்ற வழக்குகளிலும், புலனாய்வாளர்களுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறார் என்பதால், அவர் மீது இந்த வழக்கைப் பதிவு செய்ய வேண்டாம் என முடிவு செய்திருக்கிறோம்" எனத் தெரிவித்தனர். கொலை நடந்து சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருக்கும் சீரியல் கில்லரை அமெரிக்க காவல்துறை கண்டுபிடித்து, இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.