அடக்கடவுளே..!! மறைந்த கேப்டன் உடலில் இத்தனை பிரச்சனைகளா..? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு என்னென்ன உடல்நிலை பிரச்சனைகள் இருந்தன என்பது தெரியுமா..?
தொண்டர்கள், ரசிகர்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். கருப்பாக இருந்தாலும் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை பலருக்கு ஊட்டியவர். அரசியலில் திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆளும் கட்சி, கூட்டணி கட்சியான ஜெயலலிதாவையே எதிர்த்தார். அவர் நினைத்திருந்தால் கூட்டணி கட்சியை எதிர்க்காமல் மக்களுக்கு குரல் கொடுக்காமல் அடுத்தடுத்த நிலைகளை அடைந்திருக்க முடியும்.
ஆனால், அவர் வந்ததே மக்களுக்கு சேவை செய்யத்தான். அதனால் அவர் எந்த வித சமரசங்களுக்கும் இடம் தரவில்லை. இந்நிலையில், விஜயகாந்த் பல ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் அவ்வபோது வெளிநாடுகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு என்னென்ன உடல் உபாதைகள் இருக்கின்றன என்பது குறித்து நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், விஜயகாந்துக்கு நீரிழிவு நோய், தைராய்டு, கல்லீரல் பிரச்சனை உள்ளிட்டவை இருந்துள்ளது.
இந்த நீரிழிவு நோயால் கால் விரல்களுக்கு ரத்த ஓட்டம் பாயாமல் இருந்ததால் வலது கால் விரல்களில் சிலவற்றை மியாட் மருத்துவமனை கடந்த 2022 ஆம் ஆண்டு அகற்றியது. தைராய்டு பிரச்சனையால் அவரது பேச்சு பாதிக்கப்பட்டது. அதற்கு சிகிச்சை கொடுத்து வந்தார்கள். பிறகு அவ்வப்போது பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்கு செல்வார். உடனே ஓரிரு நாட்களில் வீடு திரும்பிடுவார். சிறுநீரக பிரச்சனை இருந்தது. அது நாளடைவில் சரியானது. அவருக்கு முதுகுதண்டு வடத்திலும் பிரச்சனை இருந்தது. தைராய்டும் சேர்ந்து இருப்பதால் கழுத்தில் இணைந்திருக்கும் தண்டுவடத்தின் நரம்பு பாதிக்கப்பட்டு அவருக்கு ஞாபக மறதி இருந்தது. அதேபோல், அரை மணி நேரம் கூட உட்கார முடியாமல் தவித்து வந்தார்.
இதனால் அவரை கடந்த சில மாதங்களாகவே நண்பர்களோ உடன் நடித்தவர்களோ பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதை ராதாரவி கூட குமுறலாகவே கொட்டியிருப்பார். இதற்கு பிரேமலதாவும் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பினார். அடுத்த சில நாட்களில் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேப்டன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவருக்கு வென்டிலேட்டர் சுவாசம் கொடுக்கப்பட்டது. எனினும் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர் இன்று காலமானார். இதையடுத்து அவரது வீட்டிலும் கட்சி அலுவலகத்திலும் கட்சி கொடியானது அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.