For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அட கடவுளே..!! அமேசானில் விளையாட்டு சாதனம் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்தது என்ன தெரியுமா..? கொடிய விஷம்..!!

An Amazon orderer was shocked by a deadly poisonous cobra.
03:17 PM Jun 19, 2024 IST | Chella
அட கடவுளே     அமேசானில் விளையாட்டு சாதனம் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்தது என்ன தெரியுமா    கொடிய விஷம்
Advertisement

அமேசானில் ஆர்டர் செய்தவருக்கு கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பெங்களூருவைச் சேர்ந்த தம்பதிகள் அமேசான் நிறுவனத்தில் எக்ஸ் பாக்ஸ் எனப்படும் விளையாட்டு சாதனம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளனர். அவர்களுக்கு எக்ஸ் பாக்ஸ் டெலிவரி செய்யப்பட்டது. டெலிவரிக்காக வந்த நபரிடம் இருந்து அதனை வாங்கியபோது அதற்குள் ஏதோ நகருவது போல் தெரிந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் திறந்த போது அந்த பெட்டிக்குள் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பாம்பு பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் சிக்கி இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். அதன்பேரில் மொத்த பணத்தையும் திரும்பத் தருவதாக அமேசான் நிறுவனம் கூறியது. தொடர்ந்து அந்த தம்பதியினர் மொத்த பணத்தையும் திரும்ப பெற்றதாக தெரிவித்தனர்.

மேலும், அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டு இருந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கிடையே, அமேசான் டெலிவரி பெட்டியில், பாம்பு இருக்கும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read More : நுரையீரல் பிரச்சனையால் அவதி..!! நடிகர் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் திடீர் மரணம்..!!

Tags :
Advertisement