முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடக்கடவுளே..!! காய்கறி பெட்டிக்கு பதில் மனிதனை நசுக்கி கொன்ற ரோபோ..!! இதுவரை 41 பேர் பலி..!!

02:54 PM Nov 09, 2023 IST | 1newsnationuser6
Advertisement

இப்போதெல்லாம் ஒரு மணி நேரம் செய்ய வேண்டிய வேலையை சில நிமிடங்களில் செய்து முடிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. நவீன தொழில்நுட்பம் வந்த நிலையில், பல நிறுவனங்களில் மனித உழைப்பின் தேவையை குறைந்துள்ளது. ஆனால், இந்த தொழில்நுட்பத்தால் வரும் ஆபத்துகளுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும். அப்படி ஒரு சம்பவம் தென் கொரியாவில் நடந்துள்ளது.

Advertisement

தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாய விளைபொருள் விநியோக மையத்தில் காய்கறிப் பெட்டிகளை எடுத்து சீல் செய்யும் பணிக்கு ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரோபோவின் சென்சார் செயல்பாடுகளை அங்கு உள்ள ஊழியர் ஒருவர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. நிறுவன ஊழியரை காய்கறிப் பெட்டி என நினைத்து தூக்கி கன்வேயர் பெல்ட்டில் வைத்திருக்கிறது அந்த ரோபோ.

ரோபோவின் இறுக்கமான பிடியிலிருந்து அந்த ஊழியர் தப்ப முடியாமல் திணறியுள்ளார். கன்வேயர் பெல்ட் உள்ளே சென்ற அந்த ஊழியரின் முகம் மற்றும் மார்பு பகுதி நசுக்கப்பட்டது. படுகாயமடைந்த நிலையில் அந்த ஊழியரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரோபோவிடம் சிக்கி பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக மே மாத தொடக்கத்தில் தென் கொரியாவில் ஒரு ரோபோ ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையில் ரோபோவிடம் சிக்கி அங்கு வேலை செய்ய ஊழியர் காயமடைந்தார். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் இன்டஸ்ட்ரியல் மெடிசின் வெளியிட்ட ஆய்வின்படி, 1992 முதல் 2017 வரை அமெரிக்காவில் தொழில்துறை ரோபோக்களால் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

Tags :
காய்கறி பெட்டிகியோங்சாங் மாகாணம்ரோபோ
Advertisement
Next Article