முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!… நீதிமன்றம் அதிரடி!

09:05 AM Dec 15, 2023 IST | 1newsnationuser3
Advertisement

லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு டிசம்பர் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் பெற்ற லஞ்சப் பணத்துடன் கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி கடந்த 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. எனினும், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் 3 நாள் காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அங்கித் திவாரியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அங்கித் திவாரியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 28-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

Tags :
Ankit TiwariDindigul courtextended court custodyஅங்கித் திவாரிதிண்டுக்கல் நீதிமன்றம் அதிரடிநீதிமன்ற காவல் நீட்டிப்புலஞ்ச வாங்கிய புகார்
Advertisement
Next Article