1976ல் வேலைக்கு விண்ணப்பித்த பெண்ணிற்கு 2024ல் Offer Letter..!! 48 ஆண்டு கால இடைவெளியில் என்ன நடந்தது?
பைக் சாகச பெண்ணாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டிசி ஹாட்சன். 1976 ஆம் ஆண்டு இருச்சக்கர வாகன ஸ்டண்ட் ரைடராக பணியாற்ற ஒரு நிறுவனத்துக்கு விண்ணப்பித்த நிலையில், தற்போது 2024 ஆம் ஆண்டு நியமன கடிதம் வந்திருப்பது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது பிரிட்டனில் வசித்து வரும் டிஸி ஹாட்சனுக்கு 70 வயது ஆகிறது, தபால் பெட்டியை திறந்து பார்த்த போது, 1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் ரைடர் வேலைக்காக அவர் விண்ணபித்து இருந்த கடிதம் இருந்தது. இத்தனை ஆண்டுகளாக இந்த கடிதம், தபால் அலுவலகத்தில் உள்ள டிராயருக்கு பின்னால் சிக்கி இருந்தது. அதை தபால் நிலையம் கண்டறிந்து டிஸி ஹாட்சனுக்கு தற்போது அனுப்பி உள்ளது.
இந்த கடிதம் திருப்பி கிடைத்ததை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இவ்வளவு நாளாக எனக்கு ஏன் அந்த வேலையைப் பற்றி பதில் வரவில்லை என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போது அதற்கான பதில் கிடைத்துவிட்டது. அந்த கடிதத்தின் மேல் கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று இருந்தது. அதில், "ஸ்டெயின்ஸ் தபால் அலுவலகத்தால் தாமதமாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அலுவலகத்தில் உள்ள ஒரு டிராவின் பின்னால் இந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. ", என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஸி ஹாட்சனுக்கு இந்த கடிதத்தை யார் திருப்பி அனுப்பினார்கள், எப்படி அது அவரிடம் வந்து சேர்ந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கிட்டதட்ட 50 முறை எனது வீட்டை மாற்றியுள்ளேன், மேலும் நான்கு நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளேன், ஆனாலும் என்னை எவ்வாறு கண்டுபிடித்தார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து அதை எனக்கு திருப்பி அனுப்பியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் இந்த வேலை விண்ணப்பத்திற்கு பதில் வரும் என்று ஆவலுடன் தபால் பெட்டியில் தேடி பார்ப்பேன். ஆனால் அங்கு எதுவும் இல்லாததால், நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். நான் லண்டனில் உள்ள எனது வீட்டில் அமர்ந்து இந்த கடிதத்தை டைப் செய்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்தக் கடிதம் எனது இளமைக்கால கனவுகளை மீண்டும் நியாபகப்படுத்தியிருக்கிறது. அந்த நேரத்தில் பதிலுக்காக காத்திருந்ததாகவும், இவ்வளவு தாமதமாக வந்தது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Read more ; நாடு முழுவதும் தொடங்கும் பண்டிகை காலம்…! துவரம், உளுந்தம் பருப்பு விலை 10% குறைவு…!