For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ADR Report: 1,618 வேட்பாளர்களில், 252 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது...! வெளியான அதிர்ச்சி தகவல்...!

05:50 AM Apr 13, 2024 IST | Vignesh
adr report  1 618 வேட்பாளர்களில்  252 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது     வெளியான அதிர்ச்சி தகவல்
Advertisement

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களும், அதிமுக வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல் கட்ட பொதுத் தேர்தலில் களமிறங்கியவர்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பணக்கார வேட்பாளர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

Advertisement

மொத்தத்தில், 102 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள 102 தொகுதிகளில் 42 தொகுதிகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது.

முதல் கட்டத்தில் போட்டியிடும் 1,618 வேட்பாளர்களில், 252 (16%) பேர் கிரிமினல் வழக்குகளில் உள்ளனர்., அதே நேரத்தில் 161 (10%) பேர் கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். ஏழு பேர் கொலை வழக்குகளை எதிர்கொள்கிறார்கள், 19 பேர் கொலை முயற்சி வழக்குகளில் சிக்கியுள்ளனர். முப்பத்தைந்து வேட்பாளர்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதினெட்டு வேட்பாளர்களுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன, அவர்களில் ஒருவர் மீது IPC இன் பிரிவு 376 இன் கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டு உள்ளதாக ADR தெரிவித்துள்ளது. இந்த வேட்பாளர்களில் சுமார் 28 சதவீதம் பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்களைக் கொண்டுள்ளனர், அதே சமயம் ஒரு வேட்பாளருக்கு சராசரியாக ரூ. 4.51 கோடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Advertisement