ஒடிசா சட்டப்பேரவை தேர்தல்..!! அதிகாரப்பூர்வ முடிவுகளை அறிவித்தது தேர்தல் ஆணையம்..!!
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 32 தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியமைக்க 17 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்தது.
அதே போல் 60 தொகுதிகளை கொண்ட அருணாசலப் பிரதேசத்தில் 46 தொகுதிகளை வென்று மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தின் ஒரே கட்டமாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மே 13ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை கைப்பறியது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி.
இந்நிலையில், ஒடிசா சட்டப்பேரவையில் உள்ள 147 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி கட்சி வாரியாக பெற்ற இடங்களை தெரிந்து கொள்வோம். பாஜக 78, பிஜூ ஜனதா தளம் 51, காங்கிரஸ் 14, சுயேட்சை 3, மார்க்சிஸ்ட் கம்யூனிட் 1 இடங்களை பிடித்துள்ளது.
Read More : வெற்றியோ, தோல்வியோ எழுச்சியுடன் சம்பவம் செய்த காங்கிரஸ்..!! பாஜகவை திணற வைத்த தமிழர் சுனில்..!!