உடல் எடையை குறைக்க வேண்டும், ஆனால் ஓட்ஸ் சாப்பிட பிடிக்கவில்லையா? அப்போ இதை செஞ்சு பாருங்க..
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றாலே, முதலில் நினைவிற்கு வருவது ஓட்ஸ் தான். உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பவர்களின் காலை உணவாக பெரும்பாலும் ஓட்ஸ் தான் இருக்கும். ஆனால், ஓட்ஸ் பலருக்கு பிடிக்காது. இதனால் அதை மருந்து போல், வேறு வழி இல்லாமல் சாப்பிடுவார்கள். இதற்க்கு முக்கிய காரணம், பெரும்பாலானோர் ஓட்ஸ் வைத்து கஞ்சி மட்டும் தான் செய்வார்கள். என்ன தான் செய்தலும், ஓட்ஸ் கஞ்சி ஒருபோதும் சுவையாக இருக்காது. ஆனால் இனிமேல் நீங்கள் கஷ்டப்பட்டு, ஓட்ஸை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் ஓட்ஸை வைத்து சுவையான உப்புமா செய்து சாப்பிடலாம். ஆரோக்கியமான சுவையான ஓட்ஸ் உப்புமா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதற்க்கு முதலில், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு தாளித்து விடுங்கள். பின்பு அதில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது துருவிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை நன்கு வதக்கி விடுங்கள். இப்போது அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து 2 நிமிடம் வரை நன்கு வதக்கி விடுங்கள். கேரட், பீன்ஸ் நன்கு வதங்கிய பிறகு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தக்காளி வதங்கும் வரை கிளறுங்கள்.
இப்போது, உங்களிடம் இருக்கும் ஓட்ஸ் சேர்த்து கிளறுங்கள். பின்பு, 1/4 கப் நீரை ஊற்றி 4 நிமிடம் வரை கை விடாமல் நன்கு கிளற வேண்டும். பிறகு மீண்டும் ஒரு 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, மீதமான தீயில் மூடி வைத்து விடுங்கள். 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, ஓட்ஸ் வெந்துவிட்டதா சரி பார்த்துக்கொள்ளுங்கள். ஓட்ஸ் வேகவில்லை என்றால், மீண்டும் 1/4 கப் நீரை ஊற்றி, 4 நிமிடம் மூடி வைத்து விடுங்கள். ஓட்ஸ் வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் எலுமிச்சை சாறு, வேர்க்கடலை, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஓட்ஸ் உப்புமா ரெடி..
Read more: என்னது, தலையில் பூ வைத்தால், உடலில் உள்ள நோய் குணமாகுமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.