இது மட்டும் தெரிஞ்சா போதும், இனி எலுமிச்சை பழ தோலை குப்பையில போட மாட்டீங்க.!.!
எலுமிச்சை பழம் உடலுக்கு தேவையான பல சத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது. இவற்றில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்து இருக்கின்றன. நாம் அனைவரும் எலுமிச்சை சாறை எடுத்த பின் அதன் தோலை தூக்கி வீசி விடுவோம். ஆனால் எலுமிச்சையின் தோலில் நமது உடலுக்கு நன்மை தரக்கூடிய பல சத்துக்கள் அதிக அளவில் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எலுமிச்சை தோலை வேக வைத்த நீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேக வைத்த எலுமிச்சை நீரில் வைட்டமின் சி, வைட்டமின் பி1 பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இவை நம் உடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எலுமிச்சை பழ தோலை வேகவைத்து அந்த நீரை குடிப்பதன் மூலம் சருமத்திற்கு பொலிவு கிடைக்கிறது. இவற்றில் நிறைந்து இருக்கக்கூடிய வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் வைப்பதோடு அவற்றை சேதப்படுத்தும் காரணிகளிலிருந்து பாதுகாப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் எலுமிச்சை தோலை வேகவைத்த தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான பொட்டாசியம் நம் உடலில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
எலுமிச்சை தோலை வேக வைத்த தண்ணீரில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. இவை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும் சுவாச பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வை தருகிறது. எலுமிச்சை கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பதன் மூலம் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுவதோடு அஜீரணக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. எலுமிச்சை தோல் வேக வைத்த தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன . இது ஒரு சிறந்த டிடாக்ஸ் பானமாக விளங்குகிறது. மேலும் இவை நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.