For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தூள்...! நேர்முகத் தேர்வு இல்லாத TNPSC காலியிடங்களின் எண்ணிக்கை 992 ஆக உயர்வு..‌.!

Number of TNPSC vacancies without interview increases to 992
06:51 AM Jan 02, 2025 IST | Vignesh
தூள்     நேர்முகத் தேர்வு இல்லாத tnpsc காலியிடங்களின் எண்ணிக்கை 992 ஆக உயர்வு  ‌
Advertisement

நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 651-லிருந்து 992 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

உதவி பொறியாளர் (சிவில்), வேளாண் அதிகாரி (விரிவாக்கம்), புள்ளியியல் ஆய்வாளர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), மருந்து ஆய்வாளர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், அருங்காட்சியக காப்பாட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 651 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு (நேர்காணல் இல்லாதது) கடந்த அக்டோபர் மாதத்தில் வெவ்வேறு நாட்களில் நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 651-லிருந்து 992 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன் புதிதாக 341 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பதவிகளில் பலவற்றில் காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதே போல், புதிதாகவும் நிறைய பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Tags :
Advertisement