நாளொன்றுக்கு இத்தனை முறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும்... அதிகம் சிறுநீர் கழித்தால், உடனே இதை செய்யுங்கள்..
சிறுநீர் கழிப்பதன் மூலம், உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. சிறுநீர் கழிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. சிறுநீர் சரியாக உடலில் இருந்து வெளியே செல்லவில்லை என்றால், அது நமது உடலுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். சிறுநீரை அடக்கி வைத்தால், உங்களின் சிறுநீரகம் கட்டாயம் பழுதடைந்துவிடும். எனவே சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினால் உடனே தாமதிக்காமல் அதை வெளியேற்றி விடுங்கள். என்ன தான் சிறுநீர் கழிப்பது உடலுக்கு நல்லது என்றாலும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், கட்டாயம் அதை கவனிக்க வேண்டும். சாதாரணமாக நாளொன்றுக்கு பகல் நேரத்தில் 6 முறை மற்றும் இரவு நேரத்தில் 2 முறை என்று 8 முறை சிறுநீர் கழிக்கலாம். அதற்கு அதிகமான சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு சிலருக்கு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும். மேலும் சிலருக்கு, 5 நிமிடத்திற்கு ஒருமுறை சிறுநீர் வெளியேறும். இதனால் அதிகம் உடல் சோர்வு ஏற்படும். அந்த வகையில், உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறினால், சிறுநீர் கழித்த உடன் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுங்கள். ஒருவருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால், அவர்களுக்கு சுகர் இருக்க வாய்ப்பு உண்டு. இதனால் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறுநீரகப் பாதையில் தொற்று இருந்தாலும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வாய்ப்பு உண்டு. கல் அடைப்பு பாதிப்பு, உடலில் உப்பு கரைசல் அதிகம் தேங்கி இருத்தல் போன்ற காரணங்களாலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வாய்ப்பு உண்டு. இதனால், உப்புகள் நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லையென்றால், சிறுநீரகம் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
Read more: ஒரு பாட்டில் கோகோ கோலா குடிச்சா உங்க உடலில் என்னென்ன நடக்கும் தெரியுமா? – மருத்துவர் விளக்கம்