For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதிய சாதனை... EPFO சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1,09,93,119 ஆக உயர்வு...!

Number of EPFO ​​subscribers increased to 1,09,93,119
07:55 AM Aug 01, 2024 IST | Vignesh
புதிய சாதனை    epfo சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1 09 93 119 ஆக உயர்வு
Advertisement

இபிஎஃப் திட்டத்தில் புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது என மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே தெரிவித்துள்ளார்.

Advertisement

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 15.05.2024 நிலவரப்படி புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1,09,93,119 ஆக இருந்தது என்று கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இபிஎஃப் திட்டத்தில் புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கை 11,91,562 ஆக இருந்தது என்று அவர் கூறினார். மகாராஷ்டிராவில் இந்த எண்ணிக்கை 21,16,863 ஆக இருந்தது.

தூய்மை இந்தியா இயக்கம் (ஊரகம்) முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு, நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் 2019, அக்டோபர் 2-ம் தேதிக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. திறந்தவெளி கழிப்பிடமில்லாத பகுதி மற்றும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா பகுதியுடன் கூடிய முன்மாதிரி கிராமங்கள் என்ற நிலையை நீட்டிக்கச் செய்வதற்கு இந்த இயக்கத்தின் இரண்டாவது கட்டம் 5 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கப்பட்டது.

திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 1.43 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் அளித்த தகவலின்படி, இந்த நிதியாண்டில் இதுவரை 5,13,722 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement