2050-க்குள் இந்தியாவின் 50% பகுதிகள்..!! ஐ.நா. சொன்ன பரபரப்பு தகவல்..!! என்ன தெரியுமா..?
இந்தியாவில் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஐ.நா. மக்கள் தொகை அமைப்பின் இந்தியாவுக்கான தலைவர் ஆண்ட்ரியா வோஜ்னர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”இந்தியா நிலையான வளர்ச்சியை விரிவுபடுத்துவதில் முன்னுரிமை அளித்து வருகிறது. இதில், இளைஞர்கள் மற்றும் முதியவர்களின் மக்கள் தொகை, நகரமயமாக்கல், இடம்பெயர்வு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை அடங்கும். நாட்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டுக்குள் 34.6 கோடி பேருடன் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது சுகாதாரம், வீட்டுவசதி, ஓய்வூதியத் திட்டங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. குறிப்பாக, வறுமையில் தனியாக வாழும் மூதாட்டிகள் நலனுக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். 10 முதல் 19 வயதிற்குட்பட்ட 2.25 கோடி இளம் தலைமுறையினர்களை கொண்ட நாடு இந்தியா. எனவே, சுகாதாரம், கல்வி, வேலைக்கான பயிற்சிகள், புதிய பணிகள் உருவாக்குதலில் முதலீடு செய்வதன் மூலம் நாட்டை நிலையான முன்னேற்றத்தை நோக்கி செலுத்த முடியும்.
2050-க்குள் இந்தியாவின் 50% பகுதிகள் நகர்ப்புறமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் நகரங்கள், வலுவான உள்கட்டமைப்புகள், மலிவு விலையிலான வீடுகள் கட்டுவது முக்கியமானதாகும். குழந்தைப் பேறு மற்றும் மீண்டும் கருத்தரிக்கும் கால இடைவேளை குறைந்தது 24 மாதங்கள் இருக்க வேண்டும் என நிபுணா்கள் பரிந்துரைக்கின்றனா். இது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு அவசியமானதாகும்” என்று தெரிவித்தார்.
Read More : இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமா சாப்பிடுறீங்களா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பாருங்க..!! அதிகம் சாப்பிட முடியாது..!!