முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆண்களை மயக்கி நிர்வாண போட்டோ..!! முடிவு பண்ணிட்டா விடுறதா இல்லா..!! இளம்பெண்ணுக்கு பயிற்சி..!! பக்கா ஸ்கெட்ச்..!!

She took a close-up picture of him naked while he was unconscious.
05:08 PM Oct 08, 2024 IST | Chella
Advertisement

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஷீலாநகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் அமெரிக்காவில் சில காலம் தங்கியுள்ளது. அப்போது ஜாய் ஜமீமா (28) என்ற பெண், அந்த குடும்பத்தின் மகனை இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு அவர் மூலம் ஷீலாநகரில் உள்ள அவர்களது வீட்டின் முகவரியை தெரிந்து கொண்டார். ஷீலாநகரில் இருக்கும் போது அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்த ஜாய் ஜமீமா, அவர்களிடம் நல்ல பெண்ணாக நடித்துள்ளார்.

Advertisement

பின்னர் சிறிது நாட்கள் கழித்து உங்கள் மகனை திருமணம் செய்து வைக்கும்படி அந்த இளைஞரின் பெற்றோருடன் கேட்டுள்ளார். ஆனால், அவரது பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதனால் ஜாய் ஜமீமாவின் முதல் திட்டம் தோல்வியடைந்ததது. பிறகு அந்த இளைஞரும், அவனது குடும்பமும் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். ஜாய் ஜமீமா மீண்டும் 2-வது திட்டம் போட்டு மீண்டும் அமெரிக்காவில் தங்கியிருந்த இளைஞரை மீண்டும் விசாகப்பட்டினத்திற்கு வரவழைத்துள்ளார்.

நேராக விமான நிலையம் சென்ற ஜாய் ஜமீமா முரளிநகரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். பின்னர், போதை மருந்து கலந்த குளிர்பானங்களைக் கொடுத்து அந்த இளைஞரை போதையில் மயக்கி, அவன் மீது வாசனை திரவியம் தெளித்து, அவன் மயங்கிய நிலையில் இருக்கும் போது ஆடையில்லாமல் அவனுடன் நெருங்கிய படம் எடுத்துக் கொண்டாள். பின்னர் அவற்றைக் காட்டி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த பெண் மிரட்டியுள்ளார்.

இதனால் அந்த இளைஞர் பெற்றோரிடம் பேசி திருமணம் செய்து கொள்வதாக கூறினாலும் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மிரட்டி பணிய வைத்தார். பின்னர், கடந்த மாதம் பீமிலியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் செய்து அந்த இளைஞரை ரூ.5 லட்சம் வரை செலவு செய்ய வைத்துள்ளார். பின்னர் அந்த இளைஞரின் தொலைபேசியைத் பிளாக் செய்து அவர்கள் நிச்சயதார்த்தம் மற்றும் நெருக்கமான புகைப்படங்களைக் காண்பித்து மீண்டும் அந்த இளைஞரை வீட்டிற்குள் அடைத்து வைத்தார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், இந்த புகைப்படங்களை வைத்து காவல்துறையில் வழக்குப்பதிவு செய்வேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த இளைஞர் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்துள்ளார். இருப்பினும், அந்த பெண், வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றபோது,​​ தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜமிமா கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். ஜெமிமாவை திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் அவரது நண்பர்கள் மூலம் மிரட்டியுள்ளனர்.

இறுதியாக இம்மாதம் 4ஆம் தேதி பாதிக்கப்பட்ட இளைஞர் ஜமிமாவிடம் இருந்து தப்பிச் சென்று பீமிலி போலீசில் புகாரளித்தார். இதனையடுத்து போலீசார் ஜமிமாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து லேப்டாப், டேப், 3 போன்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஜமிமாவும் அவரது நண்பர்களும் பணக்கார இளைஞர்களை குறிவைத்து காதல் என்ற பெயரில் சிக்க வைத்து பெரும் பணம் பறித்தது தெரிய வந்தது.

ஜமீமாவுக்கு இந்த கும்பல்தான் பயிற்சி அளித்து எப்படி இளைஞர்களை ஈர்ப்பது எப்படி ? யாரை சிக்க வைக்க வேண்டும்? போத மருந்தை எவ்வாறு வழங்குவது? வீடியோ எடுத்து மிரட்டுவது எப்படி? என்பதை விளக்கியுள்ளனர் பயிற்சி வழங்கி உள்ளனர். இந்நிலையில், அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மேலும் ஒரு இளைஞர் இதேபோன்று ஜமிமா வலையில் சிக்கி பணத்தை இழந்ததாக தற்போது புகார் அளித்துள்ளார். எனவே, ஜமிமா வலையில் சிக்கியவர்கள் போலீசில் புகார் அளிக்குபடி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read More : இரவு நேரத்தில் இந்த இடத்தில் மட்டும் தூங்காதீங்க..!! மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெரிய ஆபத்து காத்திருக்கு..!!

Tags :
ஆந்திர மாநிலம்இளம்பெண்நிர்வாணம்
Advertisement
Next Article