NTK| "சீமான் கட்சியில் சாதி பாகுபாடு" பரபரப்பான அறிக்கையுடன் வெளியேறிய முக்கிய நிர்வாகி.!
தமிழகத்தை திராவிட கட்சிகளிடமிருந்து மீட்கவும் தமிழ் தேசிய அரசியலை மீட்டெடுப்பதற்காகவும் நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் நாம் தமிழர் கட்சியை நிறுவினார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நாம் தமிழர் கட்சி விளங்கி வருகிறது.
சீமான் கட்சியில் நடைபெறும் சாதி பாகுபாடு நடவடிக்கைகள் பிடிக்காமல் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான ராஜு அம்மையப்பன் என்பவர் பதவி விலகுவதாக இன்று அறிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியில் இருக்கும் சாதி பாகுபாடு தான் பதவி விலகுவதற்கு முக்கிய காரணம் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் தேர்தலிலும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலிலும் என்னை வேட்பாளர் ஆக்கி அழகு பார்த்த எனது தம்பி தங்கைகளுக்கு கனத்த இதயத்துடன் விடை கொடுக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் கட்சியின் நிர்வாகத்தில் இருக்கும் முரண்பாடுகளால் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்
அங்கீகரிக்கப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான தனக்கே தெரியாமல் கட்சியில் நடைபெறும் சில நடவடிக்கைகள் காரணமாக கட்சியிலிருந்து விளக்குவதாக அறிவித்திருக்கிறார். கட்சிக்குள் அதிகமாக சாதிய பாகுபாடு நிலவுவதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் 3 முக்கியமான நபர்கள் சீமானை திருந்த விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
எனினும் நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைவர் சீமான் கடந்த 8 வருடங்களாக தன்னை கண்ணியத்தோடும் மரியாதையோடும் நடத்தியதாக தெரிவித்துள்ளார். தமிழ் தேசியம் ஒரு நாள் வெல்லும் போது அதனை மகிழ்ச்சியாக பார்ப்பேன் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்தார். அந்தக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திடீரென விலகி இருப்பது கட்சி உறுப்பினர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.