For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

NTK Seeman | நாடாளுமன்ற தேர்தல்..!! முதல் ஆளாக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் சீமான்..!!

05:53 PM Feb 20, 2024 IST | 1newsnationuser6
ntk seeman   நாடாளுமன்ற தேர்தல்     முதல் ஆளாக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் சீமான்
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

Advertisement

NTK Seeman | நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதிலும், பிரச்சார வியூகங்களை வகுப்பதிலும் மற்ற கட்சிகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், முதல் ஆளாக பாய்ந்து வந்து தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

தற்போது அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்திலும், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக கூட்டணி கான்க்ரீட் போல வலுவாகவே உள்ளது. அதன் கூட்டணியில் இருந்து யாரும் விலகுவதாக தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், கமலின் மக்கள் நீதி மய்யம், திமுக கூட்டணியில் இணையப் போவதாக பேச்சுகள் அடிபடுகின்றன. அடுத்ததாக, அதிமுகவுக்கு பலமான கூட்டணி அமையவில்லை. மிகச்சிறிய கட்சிகள் மட்டும் அதன் கூட்டணியில் உள்ளன. தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் அதிமுகடவுன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

இதனால் இப்போதைக்கு பாஜகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே கூட்டணி இல்லாமல் இருக்கின்றன. இதில் பாஜக தனது தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறது. ஆனால், நாம் தமிழர் கட்சியோ வழக்கம் போல தனித்தே களம் காண்பதாக அறிவித்து, பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சீமான் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு தான் செல்லும் மாவட்டங்களில், பிரச்சார மேடையேிலேயே வைத்து வேட்பாளர்களை அவர் அறிவித்து வந்தார்.

இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக இன்றைக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியாவிலேயே இவ்வளவு சீக்கிரமாக இதுவரை எந்தக் கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. 20 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் 10 ஆண்களும், 10 பெண்களும் இருக்கின்றனர். விரைவில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : https://1newsnation.com/hall-ticket-halticket-release-for-plus2-students-how-to-download/

Advertisement