NTK| மனைவி கயல்விழிக்கு முக்கிய பொறுப்பு.! சீமான் அறிவிப்பு.!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற மார்ச் மாதம் இரண்டாம் வாரத்திற்கு பிறகு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் (NTK) பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு இப்போது இருந்தே தயாராக தொடங்கி விட்டது
செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி(NTK) எப்போதும் போல இந்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. மேலும் இந்தியாவிலேயே முதல் கட்சியாக போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர் போட்டிகளையும் வெளியிட்டுள்ளது. அந்தக் கட்சியின் கொள்கைப்படி 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் என பாராளுமன்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த மாத இறுதியில் இருந்து 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை தொடங்க இருப்பதாக சீமான் அறிவித்திருக்கிறார். மேலும் தேர்தல் நாள் நெருங்கி வருவதை முன்னிட்டு கட்சியில் தேர்தல் பொறுப்பாளர்களையும் சட்ட ஆலோசகர்களையும் நியமித்து வருகிறார் சீமான். இந்த முறை அவரது மனைவியான கயல்விழிக்கும் தேர்தலில் NTK கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் தென் சென்னை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முன்னாள் சபாநாயகரின் மகளான கயல்விழி வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்த அவருக்கு தற்போது NTK கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
English Summary: NTK Leader Seeman appoint his Kayalvizhi as South Chennai district Election In Charge for upcoming parliamentary Elections.