இப்போதெல்லாம் ஓய்வு என்பது காமெடி ஆகிவிட்டது!. யு-டர்ன் எடுக்கும் வீரர்கள் குறித்து ரோகித் ஷர்மா பேச்சு!
Rohit sharma: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பது என்பது இப்போதெல்லாம் காமெடி ஆகிவிட்டது என்று கேப்டன் ரோஹித் சர்மாவின் கருத்துகள் வைரலாகி வருகின்றன.
இந்திய அணியில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் கேப்டன் ரோஹித் சர்மா. 2024 டி20 உலகக் கோப்பையின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு ரோஹித் சர்மா டி20 சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரை தொடர்ந்து விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இனி வரும் காலத்தில் இந்திய கேப்டன் தனது முடிவில் இருந்து யு-டர்ன் எடுக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த கருத்தை ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
ஜியோ சினிமாவிற்கு பேட்டியளித்த ரோகித், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பது என்பது இப்போதெல்லாம் நகைச்சுவை ஆகிவிட்டது என்றும் வீரர்கள் ஓய்வு அறிவித்து விட்டு, மீண்டும் வந்து விளையாடுகின்றனர்’. ஆனால், இது இந்தியாவில் நடக்கவில்லை, இந்தியாவில் இது அரிதாகவே காணப்படுகிறது, இருப்பினும் நான் மற்ற நாடுகளின் வீரர்களைப் பார்த்து வருகிறேன். முதலில் ஓய்வை அறிவித்துவிட்டு யூ-டர்ன் எடுக்கிறார்கள். இதனால், ஒரு வீரர் ஓய்வு பெற்றாரா இல்லையா என்பது குழப்பமாக உள்ளது. ஆனால், என்னுடைய முடிவு இறுதியானது. நான் அதில் உறுதியாக உள்ளேன்’. ‘T20 உலக கோப்பையை வென்ற பிறகு T20 கிரிக்கெட்டிற்கு GoodBye சொல்வதற்கு மிகச்சரியான நேரம் அதுதான் என தோன்றியது’ என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.