இனி Gpay, PhonePe-இல் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம்..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!
இந்தியாவில் மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களில் ஜி.பே., போன் பே உள்ளிட்ட யுபிஐ மூலம் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
மும்பையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தலைமையில் டிசம்பர் மாத நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5 ஆவது முறையாக மாற்றம் இன்றி 6.5% ஆக தொடரும் என்றார். நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தார். இதே போன்று வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களிலும் மாற்றம் செய்யப்படவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இந்தியாவில் கல்வி நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் யுபிஐ மூலம் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்குவதாக சக்திகாந்த் தாஸ் தெரிவித்தார். ஏற்கனவே, யுபிஐ மூலம் ஒரு லட்சம் வரை மட்டும், ஒரே சமயத்தில் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்நிலையில், தற்போது இதன் உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவுகளை, பொதுமக்கள் எளிதாக பரிவர்த்தனை செய்ய ஏதுவாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆர்.பி.ஐ. நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதேபோல் மியூச்சுவல் பண்ட், காப்பீடு, கிரெடிட் கார்டு பேமெண்ட் ஆகியவற்றுக்கு e-mandate எனப்படும் தானாகவே கணக்கில் இருந்து பரிவர்த்தனை ஆகும் பணத்திற்கான உச்சவரம்பு, ரூ.1 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே e-mandate மூலம் பணம் செலுத்த முடியும். இந்த வாய்ப்பை பலர் பயன்படுத்தி வருவதால், இதன் உச்சவரம்பை அதிகரித்திருப்பதாக ஆர்.பி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.