இனி இன்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போனில் பணம் அனுப்பலாம்.. எப்படினு தெரிஞ்சுக்கோங்க!
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இணைய இணைப்பு இல்லாமல் பணம் அனுப்பும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
வளர்ந்து வரும் நவீன உலகில் டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் அதிகரித்துவிட்டன. இனி ரொக்க பணத்தை வைத்து செலவு செய்யும் நபர்கள் கை வைத்து எண்ணும் அளவில் தான் இருப்பார் என்ற நிலையில் அனைவரும் டிஜிட்டல் பேமண்ட்-க்கு மாறி வருகின்றனர். இவை நல்லது என்றாலும், சில நேரங்களில் இது போன்ற பேமெண்ட் தளங்களால் நாம் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம்.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிமுகப்படுத்திய UPI சேவையானது, இணைய இணைப்பு இல்லாமலும் வங்கிச் சேவைகளை செய்ய அதன் பயனர்களை அனுமதிக்கிறது. *99# என்ற USSD code மூலம் ஆஃப்லைனில் இருந்து பயனர்கள் UPI பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இதன் மூலம் அக்கவுண்டில் இருக்கும் பேலன்ஸ் விவரங்களைப் பார்ப்பது, UPI பின்னை அமைப்பது, மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வங்கிச் செயல்பாடுகளை எளிதாக்குகிறது. இந்த முறையைப் பயன்படுத்துவதற்கு, முன்னால் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் விவரங்களை கொடுக்க வேண்டும். அதன் பின்னரே உங்களால் பணம் அனுப்பவோ அல்லது பெறவும் முடியும்.
இன்டர்நெட் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்ய கீழ்க்கண்ட ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றவும்.
- உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து *99#-ஐ டயல் செய்யவும்.
2. பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேலன்ஸ் விவரங்களைப் பார்ப்பது, சுயவிவரங்களைப் பார்ப்பது, பரிவர்த்தனைகள், UPI பின் மாற்றுதல் போன்ற சேவைகள் காண்பிக்கப்படும்
3. பணம் அனுப்ப நம்பர் 1-ஐ அழுத்தி "Send" என்பதைக் கிளிக் செய்யவும்.
‘டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் புதிய மாற்றம்’ ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிகள்!