முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இனி இப்படி கூட தொலைந்த மொபைலை கண்டுபிடிக்கலாம்!… வாட்ஸ் அப்பில் இ-மெயில் வெரிபிகேஷன்!

06:36 PM Nov 08, 2023 IST | 1newsnationuser3
Advertisement

இந்தியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் பயன்பாடுகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்றாகும். கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியரும் இந்த மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் அப் பயன்பாட்டில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற அடிக்கடி புதிய தந்திரங்களைக் கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் பயனர்களின் பாதுகாப்புக்காக மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய பிரைவசி அம்சங்களைச் சேர்த்து வருகிறது.

Advertisement

ஏற்கனவே வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் மெசேஜ்களை என்கிரிப்ட் செய்யும் அம்சம் பயன்பாட்டில் உள்ளது. இத்துடன் பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்த கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் உருவாக்கி வருகிறது. சமீபத்தில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் பாஸ் கீ வசதியை அறிமுகப்படுத்தியது. இப்போது, ​வாட்ஸ்அப் பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெரிஃபிகேஷன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்டில், வாட்ஸ்அப் இந்த அம்சத்தை சோதிக்கத் தொடங்கியது.

WABetaInfo அளிக்கும் தகவலின்படி, இந்த அம்சம் இப்போது ஆண்டிராய்டு மொபைல்களுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் இந்த இமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் கிடைக்கும். Settings பகுதியில் உள்ள Account பிரிவில் இந்த அம்சம் இருப்பதைப் பார்க்கலாம். இந்த வசதி விரைவில் எல்லா பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய சரிபார்ப்பு முறை தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. இருப்பினும், அடுத்த சில வாரங்களில் இந்த அம்சம் பரவலாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. வாட்ஸ்அப்பில் பயனரின் அடையாளத்தைச் சரிபார்க்க மொபைல் எண் முதல் வழியாக இருக்கும், நிலையில், அதற்கு மாற்றாக மின்னஞ்சல் மூலம் சரிபார்க்கும் வசதி வந்திருக்கிறது.

இந்த அம்சத்தை பயன்படுத்த, ​​பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி வாட்ஸ்அப்பில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் இமெயில் முகவரியை வேறு யாரும் அறிய முடியாது என்று வாட்ஸ்அப் உறுதி அளிக்கிறது. இருந்தாலும், இந்த மின்னஞ்சல் சரிபார்ப்பு அம்சம் வாட்ஸ்அப்பில் முதன்மையான வெரிஃபிகேஷன் முறையாக இருக்காது. இது வாட்ஸ்அப் கணக்குகளைப் பாதுகாப்பதற்கான கூடுதல் அம்சம் மட்டுமே. பயனரின் தொலைபேசி தொலைந்து போனாலோ, திருடு போனாலோ இந்த இமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் கைகொடுக்கும்.

Tags :
Email verification on WhatsApp!இமெயில் முகவரியை வேறு யாரும் அறிய முடியாதுதொலைந்த மொபைலை கண்டுபிடிக்கவாட்ஸ் அப்பில் இ-மெயில் வெரிபிகேஷன்
Advertisement
Next Article