For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இனி சோசியல் மீடியாவில் கணக்கு துவங்க பெற்றோரின் அனுமதி தேவை..!! மத்திய அரசு அதிரடி..!!

The central government has said that parental consent is required before children can open accounts on social media platforms.
08:02 AM Jan 04, 2025 IST | Chella
இனி சோசியல் மீடியாவில் கணக்கு துவங்க பெற்றோரின் அனுமதி தேவை     மத்திய அரசு அதிரடி
Advertisement

சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு துவங்குவதற்கு முன்னர் பெற்றோரின் ஒப்புதல் தேவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

இன்றைய இணையதள வாழ்க்கை முறை இளைஞர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போட்டுள்ளது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு செல்போனில் விரல் நுனியில் அனைத்தையும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும் நிலையில், நமக்கு தெரியாமலேயே அதில் பலர் அடிமையாகி வருகிறோம் என்பதை உணர மறுக்கிறோம்.

குறிப்பாக, ஒவ்வொருவரும் இன்ஸ்ட்ராகிராம், பேஸ்புக், யூடியூப் போன்ற ஏதாவது ஒரு சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருவோம். குறிப்பாக, குழந்தைகளும் கூட சோசியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அவர்களும் தனித்தனி அக்கவுண்டை உருவாக்கி, பயன்படுத்தி வருவதால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே பெற்றோருக்கு தெரியாமல் போய்விடுகிறது.

அதேபோல், நீண்ட நேரம் குழந்தைகள் சமூக வலைதளத்தில் செலவிடுவதால் அவர்களின் மனநிலை, கல்வி போன்றவை பாதிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அந்நாடு தடை விதித்தது. இதற்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தான், டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிகளை மத்திய அரசு கருத்துக் கேட்புக்காக வெளியிட்டிருக்கிறது. அதன்படி, சமூக வலைதளங்களில் "இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கை துவங்குவதற்கு பெற்றோரின் அனுமதியை பெற வேண்டும். கணக்கு துவங்கும் முன் இதனை வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : கடும் பனி..!! நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தபோது விபரீதம்..!! குடும்பமே மயங்கி கிடந்ததால் அதிர்ச்சி..!! ஒருவர் மூச்சுத்திணறி பலி..!!

Tags :
Advertisement