இனி ஒரே டிக்கெட்..!! பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் பிளான்..!!
தமிழ்நாடு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது. அதேபோல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை வாங்க நடத்துனர்களும் ஊக்குவிக்கப்பட உள்ளனர்.
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியது. QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம். அதன்படிம் முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் மற்ற நகரங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். 2025 ஜூன் மாதத்திற்குள் சென்னையில் உள்ள பேருந்துகளில் எல்லாம் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்படும். அதாவது, பேருந்துகளில் தானியங்கி மூலம் எந்த நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். இது போக 1,500 மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பேருந்துகளில் இருக்கும் கருவி ஒன்றை ஸ்கேன் செய்து நாம் டிக்கெட் எடுக்கலாம். மாநகர பேருந்து கார்டுகள் எதிர்காலத்தில் வழங்கப்படும். அதை இதில் டேப் செய்தும் டிக்கெட் எடுக்கலாம். நாம் செல்லும் தூரத்திற்கு ஏற்றபடி டிக்கெட் வழங்கப்படும். வெளிநாடுகளில் இப்படி டேப் செய்யும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது. மேலும், தமிழ்நாடு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது. அதிகளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள மக்கள் ஊக்குவிக்கப்பட உள்ளனர். அதேபோல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை வாங்க நடத்துனர்களும் ஊக்குவிக்கப்பட உள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் Credit Card, Debit Card, QR Code மூலமாக டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசு வழங்கப்படும். விரைவில் மெட்ரோ வழங்க உள்ள ஸ்மார்ட் கார்டுகளை இப்படிப்பட்ட பேருந்துகளிலும் பயன்படுத்தும் வசதி விரைவில் வர உள்ளது. சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட 3 ஆப்ஷன்கள் மக்களுக்கு உள்ளன. ஆனால், இது மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுக்கின்றனர். ஆனால், இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணிக்க முடியும்.
Read More : PF-இல் இருந்து கூடுதல் ஓய்வூதியம் பெற வேண்டுமா..? எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!