இனி ரயிலில் டிக்கெட் எடுத்தால் மட்டும் போதாது..!! இதையும் எடுத்துச் செல்ல வேண்டும்..!! இல்லையென்றால் அபராதம்..!!
ரயிலில் பயணம் செய்வோருக்கு இந்திய ரயில்வே ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீங்கள் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், பயணத்தின் போது அசல் (Original) அடையாளச் சான்றினை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒரிஜினல் அடையாள அட்டை இல்லாமல் பயணித்தது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும்.
பின்வரும் அசல் அடையாளச் சான்றுகளில் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்..
* ஆதார் அட்டை
* பாஸ்போர்ட்
* வாக்காளர் அடையாள அட்டை
* ஓட்டுநர் உரிமம்
* பான் கார்டு
* புகைப்படத்துடன் கூடிய வேறு ஏதேனும் அரசால் வழங்கப்பட்ட ஐடி.
உங்களிடம் அசல் அடையாளச் சான்று இல்லையென்றால், உங்கள் டிக்கெட் தவறானதாகக் கருதப்படும். மேலும், டிக்கெட் தர பரிசோதகர் உங்களுக்கு அபராதம் விதிக்க நேரிடும். டிக்கெட் பரிசோதகர் நினைத்தால், உங்களை ரயிலில் இருந்து இறக்கிவிடவும் முடியும். மூத்த குடிமக்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் அசல் அடையாளச் சான்றிதழையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இ-டிக்கெட்டுடன் பயணம் செய்யும் போது எப்போதும் உங்களின் அசல் அடையாளச் சான்றினை எடுத்துச் செல்ல வேண்டும். டிக்கெட் முன்பதிவின் போது வழங்கப்பட்ட விவரங்களுடன் உங்கள் ஐடி பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ரயில் நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன் உங்கள் இ-டிக்கெட் மற்றும் ஐடியை இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இந்த விதிகளை கடைபிடிப்பதன் மூலம், இந்திய ரயில்வேயில் சுமூகமான மற்றும் தொந்தரவு இல்லாத பயணத்தை உறுதி செய்யலாம்.
Read More : ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா..? உடல் எடை சீக்கிரமாக கூட நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்..!!