For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இனி புதிதாக கட்டப்படும் வீடுகளில் இது கட்டாயம்..!! அரசு எடுத்த மாஸ் முடிவு..!! மக்கள் ஹேப்பி..!!

As the first state in India, the Ahmedabad Municipal Corporation plans to bring new rules to set up electric vehicle charging stations for new buildings to be constructed in the coming years.
11:48 AM Jun 13, 2024 IST | Chella
இனி புதிதாக கட்டப்படும் வீடுகளில் இது கட்டாயம்     அரசு எடுத்த மாஸ் முடிவு     மக்கள் ஹேப்பி
Advertisement

நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கான எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இரு சக்கர வாகனமாக இருந்தாலும், 4 சக்கர வாகனமாக இருந்தாலும் சரி சார்ஜிங் ஸ்டேஷன் மிகவும் முக்கியம்.

Advertisement

பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், வீடுகளில் சார்ஜிங் முனையங்கள் அமைப்பதில் பல சவால்கள் இருக்கின்றன. குறிப்பாக, அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் எக்கச்சக்க பிரச்சனைகள் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முதல் மாநிலமாக அகமதாபாத் மாநகர கழகம் வரும் காலங்களில் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கு எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க புதிய ரூல்ஸ் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

புதிய கட்டுமானங்களுக்கான ப்ளூபிரிண்ட்டுகளில் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை அவசியமான அம்சமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் கொண்டு வந்தால் தற்போது எப்படி வீட்டைச் சுற்றி 1.5 அடி இடைவெளி விட்டுக் கட்டு விதிமுறை உள்ளதோ, அதேபோல் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் கட்டமைப்பு இருந்தால் மட்டுமே கட்டுமானத்திற்கான ஒப்புதல் பெற அனுமதிக்கப்படும் என்ற நிலை வரலாம்.

இந்த விதியை குஜராத் மாநில அகமதாபாத் மாநகர கழகம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. விரைவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே, அகமதாபாத் மாநகரம் முழுவதும் 81 புதிய சார்ஜிங் மையங்களுக்கான டெண்டர்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. தற்போது, ​​அகமதாபாத் மாநகர கழகத்திற்குச் சொந்தமான வளாகங்களில் 15-க்கும் மேற்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன.

Read More : பெண்களே உஷார்..!! இன்ஸ்டா நட்பால் இப்படியும் நடக்கும்..!! குளிர்பானத்தில் மாத்திரை..!! நடந்தது என்ன..?

Tags :
Advertisement