முக்கிய அறிவிப்பு...! இனி மாடுகளை ரோட்டில் திரியவிட்டால் ரூ.12,000 வரை பைன்...!
புதுச்சேரியில் மாடுகளை ரோட்டில் திரியவிட்டால் ரூ.12,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சாலைகளில் முதல் முறையாக மாடுகள் திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.3,500 அபராதம்; 2ஆம் முறையாக மாடுகளை திரியவிட்டால் ரூ.12,000 அபராதம் விதிக்கப்படும். முதற்கட்டமாக புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ஒலிப்பெருக்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தலைமை செயலகம், அருங்காட்சியகம், சந்தை ஓட்ட பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதனால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை மீறினால், தவறு செய்பவர்கள் மீது நகராட்சிகள் சட்டம், 1973, பிரிவு 449ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதுச்சேரி நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும் தெரு மாடுகள், தமிழகத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட கௌசாலாவிடம் ஒப்படைக்கப்படும்.
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிக்கு வெளியே கால்நடைகள் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டால், கால்நடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாடுகளுக்கு, ரூ.3,500 அபராதம் விதிக்கப்படும். தெருவில் வழிதவறிச் சென்ற கன்றுக்கு ரூ.3,000 அபராதமும், எருமைக்கு 4,300 ரூபாயும், எருமை கன்றுகளுக்கு ரூ.4,020ம் அபராதம் விதிக்கப்படும்,” என்றார். புதுச்சேரி நகராட்சியில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்படும்.