இனி 'Google Search' ரொம்ப ஈசி.. தேடுபொறியின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்த சுந்தர் பிச்சை!
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, கூகுள் தேடுபொறியின் புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்தினார். முதல்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன் பிறகு பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பயனர்களின் கேள்விக்கு விரைவாக பதில் அளிக்கும் விதமாக, AI தொழில்நுட்பத்தை சர்ச் இன்ஜின்-இல் கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் விரைவில் பயனர்கள் தேடும் கேள்வியின் விவரங்களைக் கொடுப்பதை கூகுள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அது என்ன தொழில்நுட்பம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்த புதிய AI தொழில்நுட்பத்தை சர்ச் இன்ஜின்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம், பயனர்கள் தேடும் கேள்விகளுக்கு AI உருவாக்கப்பட்ட சுருக்கமான ரிசல்ட் முதல் பக்கத்தில் காண்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கூகுள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தகவல்களை விரைவாக மீட்டெடுத்து பயனர்களுக்கு வழங்கும் விதமாக இதனைச் சர்ச் இன்ஜின்களில் புகுத்தியுள்ளது. இதன் மூலம் கூகுள் சர்ச் இன்ஜின்னுக்கு வரும் டிராபிக் அதிகரிக்கக் கூடும் என்றும், அதனால் நிறைய வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இந்த புதிய AI தொழில்நுட்பம், வரும் வாரத்தில் கூகுள் அறிமுகப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனால் பயனர்கள், ஏதேனும் விவரங்களை தேடும் போது கூகுளின் உருவாக்கப்பட்ட சுருக்கமான பதில்களை ரிசல்ட் பேஜின் முதல் பக்கத்தில் காணலாம். கூகுளிடம் ட்ரிக்கான கேள்விகளைக் கேட்கும்போது, இதுபோன்ற AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட சுருக்கமான ரிசல்ட் காண்பிக்கப்படும்.
ஒரு வருடத்திற்கு முன்பு கூகுள், இந்தப் புதிய அம்சத்தை, சில பயனர்களிடம் சோதனைச் செய்தது. அதன் பிறகு, தற்போது உலகின் பிற பகுதிகளில், இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, அமெரிக்காவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு பில்லியன் மக்களுக்கு இந்த புதிய அம்சம் கொண்டுவரப்படும் என்று கூகுள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
கூகுள் தனது சர்ச் இன்ஜின்களில் AI பயன்படுத்துவதைக் கலிபோர்னியா மௌண்டைன் வியூவில் உள்ள அதன் தலைமையகத்தில், நடைபெற்ற மாநாட்டில் முன்னிலைப்படுத்திக் கூறியது. தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூகத்தில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படுகிறது என்பதை குறித்தும் கூகுள் விளக்கியது.
இதுகுறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பேசுகையில், “கூகுளில் நாம் முழுமையாக ஜெமினி யுகத்தில் இருக்கிறோம். இதை டெய்லர் ஸ்விஃப்டின் இசை நிகழ்ச்சி டூருடன் ஒப்பிடலாம். சில மாற்றங்களுடன் இந்த புதிய வெர்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஏஐ அனுபவத்தை நாங்கள் ஆய்வகங்களுக்கு வெளியே சோதித்து வருகிறோம். தேடல் பயன்பாட்டின் அதிகரிப்பு மட்டுமல்லாமல், பயனர் திருப்தியின் அதிகரிப்பையும் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.