இனி கொலஸ்ட்ராலை ஈசியா குறைக்கலாம்..!! வந்தாச்சு தடுப்பூசி..!! புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு..!!
ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்டிரோக் போன்ற உயிர் அபாயத்தை ஏற்படுத்தும் நோய்களுக்கு அடிப்படையாக இருப்பது கெட்ட கொலஸ்ட்ரால் தான்.
இது நம்முடைய ரத்த நாளங்களில் படிவதால் தான் அடைப்பு ஏற்படுகிறது. ஆக, கொலஸ்ட்ரால் அளவுகள் மிக அதிகமாக இருந்தால், இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
உலக அளவில் இதயம் சார்ந்த நோய்களால் ஆண்டுதோறும் 18 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. இந்நிலையில், கொலஸ்ட்ராலை குறைக்க புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரைஸ் சேகரியான் கூறுகையில், "கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு மிகக் குறைவான செலவில் தீர்வு காண நாங்கள் மிக ஆர்வமாக உள்ளோம். அதே சமயம், அது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் மட்டுமின்றி, இதுபோன்ற வசதிகள் கிடைக்காத பல நாடுகளுக்கும் இது கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஏனென்றால், இது விலை உயர்ந்த ஆய்வு நடவடிக்கையாக அமைகிறது'' என்று தெரிவித்தார். புதிய தடுப்பூசியானது PCSK9 இன்ஹிமிட்டர் என்ற பெயரில் இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நம் உடலில் செலுத்தும்போது, அது PCSK9 அளவை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது. ஏனென்றால், PCSK9 என்பது எந்த அளவுக்கு கூடுதலாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் மிக அதிகமாக இருக்கும்.
இதுகுறித்து இதயநல மருத்துவர் அபினாஷ் அச்ரேகர் கூறுகையில், ”இந்த தடுப்பூசியை மாதம் இரண்டு முறை செலுத்திக் கொண்டதன் அடிப்படையில் கெட்ட கொலஸ்ட்ராலை ஏற்படுத்துகின்ற புரதம் தடுக்கப்பட்டது. அந்த வகையில், என்னுடைய கெட்ட கொலஸ்ட்ரால் அளவு 60% வரை குறைந்தது. ஆனால், இந்த தடுப்பூசி விலை உயர்ந்தது. அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அல்லது இதய நோய் மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் தான் இதைச் செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.
தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது..?
தடுப்பூசியில் தொற்று ஏற்படுத்தாத வைரஸ் ஒன்று இடம்பெறுகிறது. இந்த வைரஸின் வெளிப்புற ஓட்டின் மீது கெட்ட கொலஸ்ட்ராலை ஏற்படுத்துகின்ற PCSK9 புரதம் ஒட்டிக் கொள்ளும். இந்த சமயத்தில் நம் உடல் மிகுதியான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அதன் எதிரொலியாக கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுக்குள் வரும். இருப்பினும் ஆரோக்கியமான, சீரான உணவுப் பழக்கங்கள், தினசரி உடற்பயிற்சி போன்ற வாழ்வியல் நடைமுறைகளின் மூலமாக கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதே இயல்பானது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.